மொபைலில் தமிழ்தளங்களை வாசிக்க எளிய வழி!

5
ஐ-போனில் தமிழ் வாசிக்கலாம்
மொபைல் சந்தையில் புதிய புதிய தொழில் நுட்பங்கள் வந்து கொண்டிருந்தாலும் அவை ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு குறை இருக்கத்தான் செய்கிறது.இப்போதும் கூட நம்மால் மொபைலில் தமிழ் இணைய தளங்களை வாசிக்க முடிவதில்லை.மொபைலில் முன்னிருப்பாக (default) கொடுக்கப்பட்டிருக்கும் ப்ரௌசர்களில் தான் இது பெரும் பிரச்சனையாக உள்ளது.

அதற்கு தீர்வாக அமைவது தான் opera mini browser

இந்த அப்ளிகேஷனில் ஒரே ஒரு மாறுதலை செய்வதன் மூலம் நாம் நமது மொபைலில் தமிழ் இணையதளங்களை அழகான தமிழில் வாசிக்க முடியும்.

முதலில் உங்கள் மொபைல் ப்ரௌசரில் http://www. opera.com/mini/ எனும் முகவரிக்குச் சென்று ஒபெரா மினி அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யவும். அல்லது FireFox, IE போன்ற உங்கள் கம்ப்யூட்டரின் ப்ரவுஸர் மூலம் டவுன்லோடு செய்திருந்தால் அதை USB cable மூலமாகவோ அல்லது card reader மூலமாகவோ இன்ஸ்டால் செய்யவும்.

operamini - ஐ தரவிறக்க செய்ய இங்கே அழுத்தவும் இந்த அப்ளிகேஷனை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்த பிறகு...

1. opera mini browser - ஐ ஓபன் செய்யவும்

2. அட்ரஸ் பாரில் opera:config என்று மட்டும் டைப் செய்து ஒகே கொடுக்கவும். (http://www என்று டிஃபால்ட்டாக தெரியும் எழுத்துக்களை நீக்கி விட வேண்டும்)

இந்த மாறுதலை செய்தாலே போதும்
3. வரும் "பவர் யூஸர் செட்டிங்ஸ்" power-user setting பக்கத்தில் use bitmap fonts for complex scripts என்பதில் enable YES கொடுத்து save செய்யவும். (படத்தை பார்க்கவும்!)

4. பிறகு opera mini - ஐ யை restart செய்யவும். இனி எல்லா தமிழ் இணையதளங்களையும் நீங்கள் உங்கள் மொபைலில் வாசிக்கலாம்.

இப்போதைக்கு மொபைலில் இப்படித்தான் நாம் தமிழ் இணையதளங்களை வாசிக்க முடியும்.மேலும் operamini பிரௌசர் பெரும்பாலான மொபைல்களுக்கு சப்போர்ட் செய்வதால் இது சாத்தியமாகிறது

பின்குறிப்பு : ஆப்பிள் ஐ-போனில் முன்னிருப்பாக (default) உள்ள ப்ரௌசரில் தமிழ்தளங்களை அழகாக வாசிக்க முடியும்,மேலும் தமிழில் எஸ்.எம்.எஸ் கூட அனுப்ப முடியும்.அதற்கு அப்-ஸ்டோரில் உள்ள இலவச தமிழ் எஸ்.எம்.எஸ் அப்ளிகேஷனை நீங்கள் தரவிறக்கம் செய்தால் போதும்.

கூகுளின் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் விரைவில் தமிழ்மொழி சப்போர்ட் செய்யக்கூடிய வகையில் வேலைகள் நடைபெற்று வருகிறது. வெகுவிரைவில் அதன் அப்டேட் வெர்ஷன்களில் இந்த வசதியை நாம் பெறலாம்.அதனால் இப்போது மொபைல் பாவனையாளர்களிடையே பிரபலமாகியிருக்கும் ஆன்ட்ராய்டு ஆபரேட்டிங்கில் தமிழ் வருவதன் மூலம் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நல்ல நிலை உருவாகலாம்.

5 comments:

  1. opera:config //

    நன்றிங்கண்ணா இந்த பேரை மறந்திட்டன் ஞாபக படுத்தினதுக்கு

    ReplyDelete
  2. நல்ல பதிவாகவே இருந்திருக்கும் மொபைல் இணையம் உபயோகிப்பவர்களுக்கு

    ReplyDelete
  3. @KANA VARO

    வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே...

    ReplyDelete
  4. இந்தியாவில் தயாரிக்கும் கைபேசியில் கூட இந்திய மொழி இல்லாமல் இருப்பதை நாமும் சகித்துக்கொள்கிறோம். அரசும் (TRAI) யும் என்ன செய்துகொண்டிருக்கிறது?யாருக்கும்புரியவில்லை,அரசுக்கும் அக்கரை இல்லை. நம் தமிழ் மொழி எப்போது எல்லா கைபேசிகளிலும் ஒளிக்கப்போகிறது? கணினி நுட்பவியளாலர்கள் செயல்பட்டால் விரைவில் முடிக்கலாம்.

    ReplyDelete